2027 வரவு செலவுத் திட்ட யோசனைகளின் இறுதி ஆவணம் ஜனாதிபதியின் பார்வைக்கு!

Author
0

 2027ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்ட யோசனைகள் அடங்கிய இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்துப் பார்வையிட்டார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


டித்வா பேரழிவு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களுக்கு மத்தியிலும், சரியான நிர்வாகம் மற்றும் உயர் நிதி ஒழுக்கத்துடன் செயற்பட்டமையின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதற்கு தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 இதற்கமைய, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலக்கையும் தாண்டி, பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றியமைக்கும் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட 2,000 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (12) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top