பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!

Author
0

 நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாக பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் சர்ச்சைக்கிடமான புத்தர் சிலை தொடர்பில் நிலுவையிலுள்ள வழக்கு இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட அவ்வழக்கில் பெயரிடப்பட்டுள்ள மேலும் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதற்கமைய, பலங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கின் மேலதிக விசாரணையை 2027 ஜனவரி 06ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top