வவுனியாவில் மாநகரசபை ஊழியரை தாக்கிய பெண் அதிரடியாக கைது

Author
0

 வவுனியா - குருமன்காட்டில் பெண் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாக மாநகரசபை ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் இன்று(11.11.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,



வவுனியா - குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மரக்கறி மற்றும் பழங்களை அகற்றும் பணியில் வவுனியா மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, குறித்த வியாபார நிலையத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

பெண் கைது

இதன்போது தாக்குதலுக்கு இலக்கான மாநகரசபை ஊழியர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணைப் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.   

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top