மிஸ் இன்டர்நேஷனல் போட்டியில் இலங்கை அழகி பங்கேற்பு

Author
0

 ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள 64வது மிஸ் இன்டர்நேஷனல் - 2026 ( Miss International - 2026 ) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகஇ டிஃபனி விஜேபால இன்று காலை (11) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் போட்டி உலகின் முன்னணி அழகுப் போட்டிகளில் ஒன்றாகும்.

இதில் 80 நாடுகளைச் சேர்ந்த இளம் அழகிகள் பங்கேற்கின்றனர்.

ஜப்பான் நோக்கி பயணம்

இந்தப் போட்டி ஜப்பானின் டோக்கியோவில் இன்று (11) முதல் 25ஆம் திகதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஃபனி விஜேபால இன்று அதிகாலை 12.45 மணிக்கு கேத்தே பசிபிக் ஏர்வேஸின்  CX-711 விமானத்தில் ஹொங்கொங் வழியாக ஜப்பானை நோக்கிப் பயணப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top