இந்திய குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா இலங்கை வருகை

Author
0

 இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா இன்று(11.11.2026) கொழும்பை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் இடம்பெறும் முதலாவது பிம்ம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.

ஜகத் பிரகாஷ் நட்டா இலங்கை வருகை

விமான நிலையத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவரை வரவேற்றுள்ளார்.

பொது சுகாதார ஒத்துழைப்புக்கான BIMSTEC அமைப்பின் முன்னணி நாடாக இலங்கை இந்த மாநாட்டை நடத்துகின்றது.

பிராந்திய நாடுகளுக்கிடையிலான சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொதுவான சுகாதார சவால்களை எதிர்கொள்வது தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top