செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
ரஷ்யாவில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
ரஷ்ய தளபதி பலி
தி மிரர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இன்று காலை, செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தளபதி தனது காரில் புறப்பட்ட நிலையில், காரின் அடியில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததாகவும், தொலைவிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விடயம் என்னவென்றால், ட்ரம்பின் பிரதிநிதிகளான ஜாரெட் குர்ஷ்னரும், ஸ்டீவ் விட்கோஃபும், உக்ரைன் தொடர்பில் புடினுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக மாஸ்கோ வந்தடைந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

