திடீரென இரத்தச் சிவப்பு நிறமாக மாறிய நதி: அச்சத்தில் மக்கள்

TubeTamil News
0

 ஜப்பானில் பாயும் நதி ஒன்று திடீரென இரத்த சிவப்பு நிறத்தில் மாற்றமடைந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

 ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதிஏ , திடீரென சிவப்பு நிறமாக மாறியது.  அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

 அதேசமயம், மிகப் பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது.

 கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஹஜிம் முரானோ தெரிவித்தார். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். 

அழகு சாதன தொழில்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் பொதுவாக பாதுகாப்பானது என்று அமெரிக்க நச்சுப் பொருட்கள் மற்றும் நோய்ப் பதிவேடு முகமை தெரிவித்துள்ளது. 

 தொழிற்சாலைகளில் இந்த ரசாயனம் குளிர்விக்கும் செயல்பாட்டில் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top