17 வயது சிறுமியை காணவில்லை..!!

tubetamil
0

 நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் 17 வயதுடைய பெண் குழந்தையொன்று காணாமல் போயுள்ளது.

சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போன சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காயத்ரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற பாடசாலை மாணவியே காணாமல் போயுள்ளார்.

சிறுமியைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், அவரைக் கண்டு பிடிப்பதில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

காணாமல் போன சிறுமியின் புகைப்படம் மேலே காட்டப்பட்டுள்ளது, மேலும் அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரியப்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் பரிசோதகர்  - 0718 591 630
நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் - 0312 222 227


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top