யாழில் உயிரை மாய்த்த முன்னாள் இராணுவ சிப்பாய்

tubetamil
0

யாழில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ் அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை பழக்கத்திற்கு ஆளான ஈஸ்வரன் சத்தியசீலன் (வயது 29) என்பவரே உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் உயிரை மாய்த்த முன்னாள் இராணுவ சிப்பாய் | An Ex Army Soldier Committed Suicide In Jaffna

சிகிச்சை பெற்று வந்த நபர்

பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top