நண்பரை மணம் முடித்த பிரபல OpenAI நிறுவனத்தின் CEO

keerthi
0


 ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 

எனினும்   அதனை தொடர்ந்து, ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

 ஹவாயில் நடைபெற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலிவர் முல்ஹெரின் மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA Foundation ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது ஐஓடி எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். 

தற்போது, சாம் ஆல்ட்மேனுடன் திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆலிவர் முல்ஹெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் அவர், "எனது சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்'' என தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top