நோயாளர் காவு வண்டி கூட செல்ல முடியாத நிலையில் வீதிகள்..!!

tubetamil
0

 


நோயாளர் காவு வண்டி கூட செல்ல முடியாத நிலையில் வீதிகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கிளிநொச்சி - கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுண்டிகுளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியே இது.

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகவும், அப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சட்ட விரோத மணல் அகழ்வு காரணமாகவும் பிரதான வீதி மற்றும் உள்ளகவீதிகள் அனைத்துமே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குன்றும் குழியுமாகவும் காணப்படுகிறது. 

அப்பகுதியில் அவசர தேவை கருதி நோயாளர் காவு வண்டி கூட செல்ல முடியாத நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.  

குறித்த பகுதிக்கான பேருந்து சேவையும் தற்பொழுது இடம்பெற முடியாத நிலையில் தொடர்ச்சியாக பேருந்துகள் பழுதடைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமன்றி சுண்டைக்குளம் கடல் பகுதிக்கு மீன்பிடி தொழிலுக்காக செல்லும் மீனவதொழிலாளர்கள் மற்றும் மீன் வியாபாரத்திற்காக செல்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top