வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 4 பாதாள உலகத் தலைவர்களின் கூட்டுத் தொலைபேசி உரையாடல் கசிவு !!

Editor
0

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தலைவர்களின் கூட்டுத் தொலைபேசி உரையாடல் கசிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.                                

பாடசாலை மாணவியிடம் தொலைபேசியில் ஆபாச உரையாடல்... ஆசிரியருக்கு நேர்ந்த கதி! | Obscene Conversation Teacher With A Schoolgirl

இது குறித்து பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தியுள்ளனர். சுமார் 22 நிமிடங்கள் நீடிக்கும் இந்த உரையாடலில், ரசல் ஸ்மித், பிரெஞ்சு ரூபன், இங்கிலாந்தின் குடு லால் மற்றும் வெல்லே சாரங்க ஆகிய நான்கு குற்றவாளிகளே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட 'வெல்லே சாரங்க' என்பவரை அந்த நாட்டு பொலிஸார் நடத்திய விதம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் அந்நாட்டுப் பிரஜைகளைத் தாக்குவதற்கு, இலங்கையிலுள்ள தனது சகாக்களைத் தூண்டுவது தொடர்பாக ரசல் ஸ்மித் இந்த உரையாடலில் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்தொன்றை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.   

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top