உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டிருப்பதை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனுவின் மேலதிக விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மேலதிக ஆய்வை அன்றைய தினம் எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் ஓகஸ்ட் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
