தமிழ் சின்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’, அதன் 10ஆவது சீசனுடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்கவுள்ளது.

செப்டெம்பர் 06ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹொட்ஸ்டார் OTT தளத்திலும் ஒரே நேரத்தில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும், பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளை 24 மணி நேரமும் ஜியோ ஹொட்ஸ்டார் தளத்தில் நேரடியாக பார்க்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய சீசனை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘கார்னி விழா’ (Carni Vizha) விளம்பர முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீசன் 10 ஆரம்பத்தை அறிவிக்கும் வகையில், விஜய் சேதுபதி இடம்பெறும் ‘ஒட்டிக்கிச்சு’ என்ற சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறை பொதுமக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளனர். இதற்காக நடத்தப்பட்ட ‘பிக்பாஸ்: தி காமன் மேன்’ முயற்சியின் வெற்றியாளர்களும் மற்ற போட்டியாளர்களுடன் இணைந்து களமிறங்கவுள்ளனர்.

விஜய் சேதுபதி தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

புதிய போட்டியாளர்கள், புதிய சவால்கள், புதிய சர்ச்சைகள் — பிக்பாஸ் சீசன் 10க்கு ரசிகர்கள் தயாரா?