ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.