விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில்,

"முந்தைய அரசின் பல திட்டங்கள் பெயர் மாற்றப்பட்டிருந்தாலும், அவற்றை முழுமையாக கைவிடாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கது. திட்டத்தை ரத்து செய்யாமல், பெயரை மட்டும் மாற்றி செயல்படுத்துவது பாராட்டுக்குரியது." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,

சமூக நீதி தொடர்பான துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளதையும், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் பாராட்டினார்.

அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மற்றும் பண்டிதர் அயோத்திதாசர் வீடு கட்டும் திட்டத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், "ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்களில் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. அவற்றை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்." என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக முதலமைச்சர் விஜய் மற்றும் நிதியமைச்சருக்கும் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.