
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், நேபாளப் பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 2,498 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து, ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் பெருமளவிலான சேறு, பாறைச் சரிவுகள் பல பகுதிகளில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளன.

மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதுவரை 4,451க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, போட்டேகோஷி ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதால், புதிய வெள்ள அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் மீட்புக் குழுக்களும் பொதுமக்களும் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், உயிரிழப்பு மற்றும் காணாமல் போனோர் எண்ணிக்கை மேலும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேரழிவைத் தொடர்ந்து சர்வதேச உதவிகளும் மீட்பு முயற்சிகளுக்கான ஆதரவும் அதிகரித்து வருகின்றன.

நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திப்போம்.