முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (18) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 6 பேரை பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.