ஓமானில் கைதான ‘சமிட்புர சது’ CCDயிடம் ஒப்படைப்பு!

Author
0
🇴🇲 ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சது’ என அழைக்கப்படும் கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா, இன்று (18) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
🔴 திட்டமிட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான ‘மோதரை சது’ அல்லது ‘சமிட்புர சது’, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
🔎 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு
📌 கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா, 2025 மார்ச் 22ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
⚖️ கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவரான இவர், இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முக்கியமாகத் தேடப்பட்ட நபராகக் கருதப்படுகிறார்.
✈️ ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், பின்னர் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top