மணற்காட்டில் சவுக்குக்காட்டில் தொடரும் தீ! — தீயைக் கட்டுப்படுத்த ஹெலிகொப்டர் களமிறக்கம்!

Author
0
📍 யாழ்ப்பாணம் – மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்றது.
🔥 இதனால் பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚒 நேற்று முதல் தொடர்ச்சியாக தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிலைமையின் தீவிரத்தை கருத்திற்கொண்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
🚁 மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, தீ பரவலை விரைவாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
🤝 சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
⚠️ மணற்காட்டுப் பகுதியில் தீ பரவல் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top