இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, வல்லரசுகளின் அதிகப்படியான பேராசைகள் மற்றும் கோரிக்கைகளை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில், “எந்தவொரு சூழ்நிலையிலும் இஸ்லாமிய உலகிற்குள் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவே நாம் முயல்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சவூதி அரேபியா, எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இஸ்லாமிய உலகின் “பெரும் குடும்பத்தின்” ஒரு பகுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மைய மோதலின்போது ஈரானிய மக்கள் 40 நாட்களாகத் தளராது காட்டிய உறுதியை பாராட்டிய அவர், அவர்களின் எதிர்ப்பு இஸ்லாமிய உலகிற்கு ஒரு முக்கியமான பாடத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
