
பாதுகாப்புப் படைகளின் பணிக்குழாம் பிரதானி / பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி பதவியை இரத்து செய்வதற்கான சட்டமூலம், எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், அன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

வாக்கெடுப்பு கோரப்படும் நிலையில், அதே நாளில் பிற்பகல் 5.00 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் முப்படைகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நிர்வகிப்பதற்காக இந்தப் பதவி உருவாக்கப்பட்டிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில், குறிப்பாக பாதுகாப்புச் செலவினங்களை நிர்வகிக்கும் நோக்கில் இந்தப் பதவி அவசியமில்லை எனக் கருதப்பட்டதால், அதனை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த பாராளுமன்ற அமர்வு செப்டெம்பர் 8 முதல் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.