
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், 11 தொன் நிவாரணப் பொருட்களுடன் 4ஆவது விமானம் நேபாளத்தை சென்றடைந்துள்ளது.

விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் நேபாள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களுடன் கூடிய சுரங்கத் தொழில்நுட்ப நிபுணர் குழுவும், DNA பரிசோதனைக்கான தடயவியல் நிபுணர்கள் குழுவும் இடம்பெற்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக:

போர்வைகள்

தூங்கும் பைகள்

தற்காலிக கூடாரங்களுக்கான தார்ப்பாய்கள்

பிளாஸ்டிக் தாள்கள்

சுகாதாரப் பொதிகள்
உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.

நேபாளத்தின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது.