திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் பகுதியில், சீமெந்து குழைக்கும் கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த கோர விபத்து நேற்று சனிக்கிழமை மாலை, திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞர் தம்பலகாமம், பட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.