நடுவீதியில் கவிழ்ந்த கொள்கலன் வாகனம் — போக்குவரத்து பாதிப்பு!
Author
ஆகஸ்ட் 29, 2026
0
ஹொரணை – கொழும்பு வீதியின் கோனபொல சந்திக்கு அருகில், கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வீதியின் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (29) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹொரணை கைத்தொழில் வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிச் சென்ற கொள்கலன் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொள்கலன் வாகனம் அதிக வேகத்தில் வந்து வளைவைக் கடக்க முயன்றமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.