வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ருஹுணு கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த எசல பெரஹெரா மற்றும் ஆடிவேல் விழா, புனித தீர்த்தோற்சவத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளாசியைப் பெற்றனர்.
பல நாட்களாக இடம்பெற்று வந்த பூஜைகள், பெரஹெரா ஊர்வலங்கள் மற்றும் விசேட சமய நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் இவ்வாண்டுக்கான விழா நிறைவுக்கு வந்தது.
