இலங்கையில் வயதான பெற்றோரை அவர்களது சொத்துக்களிலிருந்து வெளியேற்றி, வீதியில் வசிக்கும் நிலைக்கு தள்ளியதாக மகன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்று திரும்பிய தமது மகன், தங்களது சொத்துக்களை பறித்ததுடன், உடமைகளுக்கும் தீவைத்து வீட்டை விட்டு வெளியேற்றியதாக வயோதிப தம்பதியினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமது மகன் தற்போது செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருவதாகவும், தங்களது மகள் கணவனை இழந்து வறுமையில் வாழ்ந்து வருவதாகவும் அந்தத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது தங்குவதற்கு நிரந்தரமான இடமின்றி தவித்து வரும் வயோதிப தம்பதியினர், தங்களுக்கு ஒரு பாதுகாப்பான இருப்பிடத்தைத் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
